மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று - மொத்த எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய மேலும் 10பேர் இன்று (29) இதுவரையான காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1540 ஆக அதிகரித்துள்ளது.

இதில் 03 பேர்  வெளிநாட்டில் இருந்து நாடுதிரும்பி தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தவர்கள் என்றும் 07 பேர் கடற்படையினர் என்றும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அந்தவகையில் தற்போது தொற்று உறுதியாகியவர்களில் 776 பேர் தொடர்ந்தும் வைத்தியச கண்காணிப்பில் உள்ளத்துடன் 754 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

No comments: