“ஒற்றையாட்சி கொள்கைக்கு பின்னால் தமிழர்கள் ஒன்றுபடுவதால் எந்த பயனும் இல்லை”

ஒற்றையாட்சி கொள்கைக்கு பின்னால் தமிழர்கள் ஒன்றுபடுவதால் எந்த பயனும் இல்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

உரிமைகளை வென்றெடுக்க தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும் எனும் நவிப்பிள்ளையின் கருத்து தொடர்பாக நேற்று (20) யாழில் இடம்பெற்றஊடக சந்திப்பில் பதிலளித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஒன்றுபடுதல் என்பது உண்மையான தெளிவான ஒரு கொள்கைக்கு பின்னால் மட்டுமே இருக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எனவே ஒற்றையாட்சி கொள்கைக்கு பின்னால் ஒன்றுபடுவது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments: