தமிழகத்தில் கொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தாக்கம் உறுதியாகி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் இன்று (ஞாயிறுக்கிழமை) உயிரிழந்தார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 58 வயதுடைய ஆண் என்றும் இதனை அடுத்து தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தைப் பொருத்தவரை கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில் நேற்று ஒரே நாளில் 526 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,535 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று வரை சிகிச்சையில் உள்ளவர்கள் மட்டும் 4,464 பேர் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் நேற்று மட்டும் குணமடைந்து 219 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அத்தோடு சென்னையில் நேற்று மட்டும் மேலும் 279 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் மொத்தமாக 3,330 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments