கொரோனா அபாய நிலைமை இன்னும் குறைவடையவில்லை - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்டுள்ள அபாய நிலைமை இன்னும் குறைவடையவில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டின் பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வாதார நிலையை கருத்திற்கொண்டு நாளை திங்கட்கிழமை முதல் ஊரடங்கு உத்தரவை தளர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த காலகட்டத்தில் பொதுமக்கள் பொறுப்பற்று செயற்படுவார்கள் என்றால் மேலும் ஆபத்தான நிலைக்கு செல்ல வேண்டியேற்போடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

No comments: