மன்மோகன்சிங் விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன் - பிரதமர் மஹிந்த

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் திடீர் நெஞ்சு வலியால் எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டு அவருக்கு இதய சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மன்மோகன் சிங் விரைவில் குணமடைய இலங்கை மக்கள் சார்பாக பிரார்த்திப்பதாகவும் மேலும் அவர் விரைவில் முழுமையாக குணமடைந்து வீடு திரும்புவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

No comments: