ரயில் நிலையங்களில் பொருத்தப்பட்டது வெப்பநிலை அளவிடும் கருவிகள்!

பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காக ஏறக்குறைய இரண்டு மாதங்கள் அமுலில் இருந்த ஊரடங்கு உத்தரவு நாட்டின் பல இடங்களில் தளர்த்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் பொதுமக்கள் அதிகளவாக கூடும் ரயில் நிலையங்களில் வெப்பநிலை அளவிடும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸின் பரவலை கட்டுப்படுத்தும் முகமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார்.
மேலும் கோட்டை ரயில் நிலையம் போன்ற நிலையங்கள் இந்த கருவிகள் பொறுத்தப்பட்டுள்ளதாகவும் இதன்மூலம் தொற்றுள்ளவர்களை இலகுவாக கண்டறிய முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த நடைமுறையினை நாடு முழுவதும் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் நிறுவதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.

No comments: