சிசுவை வீட்டு மலசலகூடக் குழிக்குள் போட்ட தாயார் - யாழில் சம்பவம்

பிறந்த சிசுவை வீட்டு மலசலகூடக் குழிக்குள் போட்ட தாயார் அச்சுவேலிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், புத்தூர் கிழக்கு விக்னேஸ்வரா வீதியில் உள்ள வீட்டில் இந்தச் சம்பவம் நேற்று (20) மாலை இடம்பெற்றது.

நான்கு நாள்களுக்கு முன்னர் குறித்த பெண்ணுக்கு சிசு பிறந்துள்ளது. சிசுவை வீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மலசலகூடத்தின் குழிக்குள் தாயார் போட்டுள்ளார்.

நான்கு நாள்கள் ஆகிய நிலையில் சிசுவின் உடல் அழுகி, அயலில் உள்ள குடியிருப்பாளர்களுக்கு துர்நாற்றம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அச்சுவேலி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் சிசுவின் சடலத்தை மீட்டதுடன், தாயாரைக் கைது செய்தனர்.

சந்தேக நபரான பெண்ணின் கணவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக அச்சுவேலிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments: