நவாலியில் அமெரிக்கன் சிலோன் மிசனின் இடுகாட்டில் கல்வெட்டுகளுக்கு சேதம்விளைவித்த ஐவர் அதிரடியாக கைது

நவாலி அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபைக்கு சொந்தமான இடுகாட்டில் நினைவு கல்வெட்டுகள் சேதமாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேர் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்த நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, கும்பல் ஒன்று இடுகாட்டில் வைத்து கள்ளு குடித்துவிட்டு கல்வெட்டுகளை சேதப்படுத்தியதாக விசாரணையில் தெரியவந்தது. குறித்த கும்பலைச் சேர்ந்த 5 பேர் நேற்றிரவு மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஐவரும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments