கொரோனா வைரஸ்- உலகளவில் இரணடைவது இடத்தில் பிரேசில்

உலகளவில் 61 இலட்சத்து 50 ஆயிரத்து 483 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பிரேசில் அதிக நோயாளிகள் பாதிக்கப்பட்ட இடமாக பதிவாகியுள்ளது.

அந்தவகையில் தற்போது பிரேசிலில் கடந்த 24 மணிநேரத்தில் 31 ஆயிரத்து 628 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி மொத்த பாதிக்கப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 4 இலட்சத்து 99 ஆயிரத்து 966 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் அங்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 28 ஆயிரத்து 849 ஆக உயர்ந்துள்ளது.

No comments: