ஜேர்மனியில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 181,482 ஆக அதிகரிப்பு

கொரோனா வரைஸ் உலகநாடுகளில் பல மனித பேரழிவுகளை ஏற்படுத்திவரும் நிலையில் ஐரோப்பாவிலும் அதிக எண்ணிக்கையிலானவர்களை காவுகொண்டுள்ளது.

இந்நிலையில் ஐரோப்பாவில் அதிக பாதிப்புக்களை எதிர்கொண்ட நாடுகளில் 6 ஆவது இடத்தில் உள்ள ஜேர்மனியில் புதிதாக 275 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 83 ஆயிரத்து 294 ஆக அதிகரித்துள்ளததாக அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அத்தோடு நேற்றுமட்டும் 06 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 600 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை பாதிக்கப்பட்டவர்களில் 1 இலட்சத்து 64 ஆயிரத்து 900 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: