பிரித்தானியாவில், கொரோனா வைரஸ் ஆலோசனைகளை பின்பற்றாத 19 பேர் கைது

பிரித்தானியாவில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளை பின்பற்றாத 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அவர்கள் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள சமூக இடைவெளியை பின்பற்றாததன் காரணமாக கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரித்தானியாவில் அன்றாட செயற்பாடுகளை முன்னெடுக்கும் பொருட்டு கட்டம் கட்டமாக கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

பொது மக்கள் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுமாறு அறிவுறத்தல் வழங்கப்பட்டுள்ளது. 

எனினும் சிலர் ஆலோசனைகளை பின்பற்றாது செயற்பாடுகின்றமையினால் அவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை பிரித்தானிய அரசு முன்னெடுத்துள்ளது.

Post a Comment

0 Comments