ஜூன் 20 இல் பொதுத் தேர்தலை நடத்த சாத்தியமில்லை - உயர் நீதிமன்றுக்கு அறிவித்தது தேர்தல் ஆணைக்குழு

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியம் இல்லை என  செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கிறது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் மூன்றாவது நாளாக இன்றும் (20) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதன்போது தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சார்பாக ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், பொதுத்தேர்தலை நடத்துவதற்கு இது பொருத்தமான நேரம் இல்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் சுகாதார அதிகாரிகள் உத்தியோகப்பூர்வமாக அறிவித்து 10 வாரங்களுக்குப் பின்னர்தான் ஒரு பொதுத் தேர்தலை நடத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments: