யாழ்ப்பாணம், மட்டக்களப்பு உட்பட முக்கிய விமான நிலையங்களில் பயணிகள் சேவைகள் விஸ்தரிப்பு - அமைச்சர்

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு மேலதிகமாக மத்தள, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் இரத்மலானை விமான நிலையங்களில் பயணிகள் சேவைகளை மேற்கொள்வதில்  கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் நாட்டிற்குள் பரவுவதை தடுக்க பல மாற்று நடவடிக்கைகளில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது என்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

"ஆண்டுதோறும், 10 முதல் 12 மில்லியன் பயண நடவடிக்கைகள்கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடைபெறுகின்றன, இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 18 முதல் 20 மில்லியன் வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் காரணமாக உலகம் முழுவதும் விமான சேவைகள் தடைபட்டுள்ளன, இதனால் உலகில் உள்ள அனைத்து விமான நிலைய சேவைகளும் சரிவடைந்துள்ளன" என கூறினார்.

No comments: