Tuesday, May 26, 2020

கட்டாரில் சிக்கித்தவிக்கும் இலங்கையர்களை அழைத்துவர திட்டமிடப்பட்ட விமானம் இரத்து

கட்டாரில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை அழைத்துவருவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமானம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க, “நேற்று அட்டவணைப்படுத்தப்பட்டிருந்த கட்டாரிலிருந்து பயணிக்கும் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமானம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடனான ஆலோசனைகளின்பேரில், இடைக்கால நடவடிக்கையாக அங்கு சிக்கித் தவிப்பவர்களுக்கு தங்குமிட வசதிகளை உடனடியாக ஏற்படுத்திக் கொடுக்குமாறு கட்டாரிலுள்ள இலங்கையின் பதில் தூதுவருக்கு நான் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.