பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அதிகாரம் - பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு

நாளை (26) முதல் சமூக இடைவெளியை பேணாத நபர்களை கைது செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜசிங்க வெளியிட்டுள்ள சுற்றறிக்கை மூலம் இந்த அதிகாரம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர்  தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தாக்கம் மேலும் பரவாமல் இருக்க மார்ச் 20 முதல் விதிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு உத்தரவு நாளை முதல் அனைத்து மாவட்டங்களுக்கும் பகல் நேரத்தில் முற்றிலுமாக நீக்கப்பட உள்ளது.

No comments: