கொரோனா வைரஸினால் இலங்கையில் 10 ஆவது மரணம்...!

குவைத்தில் இருந்து நாடுதிரும்பி தனிமைப்படுத்தப்பட்ட 52 வயதுடைய பெண் உயிரிழந்ததை அடுத்து இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

குவைத்தில் இருந்து நாடு திரும்பி திருகோணமலை மங்கி பிரிட்ஜ் இராணுவ முகாமில் தனிமைப்படுத்தலில் இருந்த பெண்ணே இவ்வாறு திடீரென உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, ஏற்கனவே இவருடன் குவைத்தில் இருந்து நாடு திரும்பிய பெண்கள் இருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி நேற்று காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments