இன்று நள்ளிரவுமுதல் அமுலுக்கு வரும்வகையில் பெட்ரோல் விலை குறைப்பு..!

இன்று (22) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லங்கா ஐ.ஓ.சி.யின் ஒக்டேன் 92 பெட்ரோல் லீற்றரின் விலை 5 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது.

கடந்தவாரம் முதல் உலக எரிபொருள் விலைக்கு ஏற்ப 05 ரூபாயினால் அதிகரிப்பதாக அந்நிறுவனம் அறிவித்திருந்த நிலையில் பல எதிர்ப்புக்கள் அரசாங்கத்தாரப்பில் இருந்து விடுக்கப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் லங்கா ஐ.ஓ.சி.யின் ஒக்டேன் 92 பெட்ரோல் 137 ரூபாய்க்கு விற்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments: