பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்த கல்வி அமைச்சின் அறிவிப்பு

நாட்டில் கொரோனா அச்சம் முழுமையாக குறைவடைந்ததை சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்திய பின்னரே பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்தார்.

மாத்தறை மாவட்ட செயலகத்தில் இன்று (22) நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், "COVID-19 க்கு எதிரான போராட்டத்தின் காரணமாக ஆரம்பத்தில், பாடசாலைகள் மூடப்பட்டு, மாணவர்களுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன, எனவே, COVID-19 க்கு எதிரான போராட்டம் முடிந்தவுடன் மட்டுமே பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும்" என கூறினார்.

பாடசாலை மாணவர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்படும் தேசிய வேலைத்திட்டங்கள் தொடர்பாக சிலர் தவறான கருத்துக்களை முன்வைப்பது கண்டிக்கத்தக்கது எனவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் நிலவும் நிலையில் பாடசாலை மாணவர்கள் அல்லது மாணவர்களின் பெற்றோர் சங்கடத்திற்குள்ளாகும் வகையில் எந்தவொரு திட்டமும் முன்னெடுக்கப்படாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அந்தவகையில் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான முடிவினை எடுக்க சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்கவுடன் எதிர்வரும் 26 ஆம் திகதி கல்வி அமைச்சு கலந்துரையாடும் என்றும் குறிப்பிட்டார்.

100% பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டால் மட்டுமே மாணவர்கள் பாடசாலைகளுக்கு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் மீண்டும் சுட்டிக்கா

No comments: