பிரம்மாண்ட கிரிக்கெட் அரங்கு குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்

40 மில்லியன் டொலர் செலவில் அமையும் புதிய கிரிக்கெட் மைதானம் குறித்து, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

சுமார் 40 ஆயிரம் இருக்கைகளை கொண்ட நாட்டின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் ஒன்று ஹோமாகம பகுதியில் அமைக்கப்படவுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக கலந்துரையாட பிரதமர் அழைப்பு விடுத்திருந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) அலரிமாளிகையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடல் கட்டுமானம் தொடருமா என்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த கலந்துரையாடலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அமைச்சர்கள் சிலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments: