சன நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உயிரிழப்பு - கொழும்பில் சம்பவம்

மாளிகாவத்தை மிராணி பகுதியில் மக்கள் நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் 04 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிதி விநியோக செயற்பாட்டின்போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் இந்த சம்பவத்தில் காயமடைந்த மேலும் மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தனியார் ஒருவரினால் குறித்த நிவாரணம் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அறியமுடிகின்றது.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பாக 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments: