பிக்பாஸ் 4 விரைவில் தொடங்குகிறது - வெளியானது சூப்பர் தகவல்!

தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது.

முதல் சீசனின் மூலமாக ஓவியா ரைசா உள்ளிட்டோர் மிகவும் பிரபலம் ஆகினர். காயத்ரி ரகுராம் மற்றும் ஜூலி ஆகியோர் பெரும் சர்ச்சைகளுக்கு உள்ளாகினர்.

இதனையடுத்து இரண்டாவது சீசனிலும் நகர் ஐஸ்வர்யா தத்தா யாஷிகா ஆனந்த் ஆகியோர் கலந்துகொண்டு சர்ச்சைகளுக்கு உள்ளாகினர்.

மூன்றாவது சீசன் பற்றி சொல்லவே தேவையில்லை கவின், லாஸ்லியா, சாண்டி ஆகியோர் மிகவும் பிரபலம் ஆகினர்.

அதுபோல் வனிதா, சாக்ஷி அகர்வால், அபிராமி ஆகியோர் சர்ச்சைகளுக்கு உள்ளாகினர். இதனால் இதுவரை ஒளிபரப்பான 3 சீசனுமே பட்டிதொட்டியெங்கும் பெரிய அளவில் ரீச் ஆனது. நான்காவது சீசன் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

தற்போது சின்னத்திரை படப்பிடிப்புகள் தொடங்கி விட்டதால் விரைவில் பிக் பாஸ் சீசன் 4 தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments: