நேற்றுமட்டும் 10 பேருக்கு கொரோனா தொற்று - நோயாளிகள் தொடர்பான தகவல்

இலங்கையில் நேற்று மேலும் புதிய 10 கொரோனா தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தொற்று உறுதியாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 1,869 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்தவகையில் நேற்று அடையாளம் காணப்பட்ட புதிய 10 கொரோனா தொற்றாளர்களில் 8 பேர் கடற்படையை சேர்ந்தவர்கள் எனவும் ஏனைய இருவரில் ஒருவர்  கட்டாரில் இருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தலில் உள்ளவரெனவும் மற்றையவர் இந்தியாவின் மும்பையில் இருந்து நாடு திரும்பிய நிலையில், தனிமைப்படுத்தல் முகாமில் உள்ளவரென்றும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது 736 கொரோனா தொற்றாளர்கள் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் தங்கி தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருகின்றனர். அதேவேளை, 62 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 1,122 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலையைவிட்டு வெளியேறியுள்ள நிலையில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: