சனிக்கிழமை முதல் ஊரடங்கு - ஊரடங்கு குறித்த முக்கிய அறிவிப்பு

நாளை சனிக்கிழமை முதல் நாடு முழுவதும் தினந்தோறும் இரவு 11 மணிமுதல் அதிகாலை 04 மணி வரை ஊரடங்கு அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

அந்தவகையில் அனைத்து மாவட்டங்களிலும் இரவு 11 முதல் அதிகாலை 04 மணிவரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்பு, கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கும் அனுமதி வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

No comments: