கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் சிலர் அடையாளம் - நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 04 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் இன்று (05) 07 மணி நிலவரப்படி தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 1,801 ஆக அதிகரித்துள்ளது.

இன்று இதுவரை அடையாளம் காணப்பட்டவர்கள், பங்களாதேஷிலிருந்து வந்த 02 பேர் மற்றும் கடற்படையைச் சேர்ந்த ஒருவர், என அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதியாக அடையாளம் காணப்பட்டவர் தொடர்பான விபரம் வெளியாகவில்லை.

இன்றையதினம் (05) இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 04 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பதோடு, 19 பேர் குணமடைந்துள்ளனர்.

அந்த வகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 1,801 பேரில் தற்போது 931 நோயாளிகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, இது வரை 858 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

அத்துடன் இது வரை 11 பேர் மரணமடைந்துள்ளனர். இதேவேளை, மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொடர்பிலான சந்தேகத்தின் அடிப்படையில் 48 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments