மீண்டும் திறக்கப்படுகின்றது ஈபிள் கோபுரம்

ஐரோப்பாவின் மிகவும் பிரபல அடையாளங்களில் ஒன்றான ஈபிள் கோபுரம் கொரோனா வைரஸ் தாக்கம் மேலும் பரவாமல் இருக்க பல மாதங்களாக மூடப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஜூன் 25 அன்று, ஈபிள் கோபுரம் பார்வையாளர்களுக்காக மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

மார்ச் 13 அன்று முதல் சுமார் மூன்று மாதங்களுக்கும் மேலாக ஈபிள் கோபுரம் மூடப்பட்டுள்ளது. இது இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மிக நீண்ட காலமாக மூடப்பட்ட சந்தர்ப்பம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அங்கு செல்பவர்களுக்கு முக்கவசம் அணிதல் சமூக இடைவெளி உட்பட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரான்ஸ் முழுவதும், சுற்றுலாப் பயணிகளை கவரும் பல சுற்றுலா தளங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வெர்சாய் அரண்மனை ஜூன் 6 ஆம் திகதி திறக்கப்பட்டது, இதேவேளை ஜூலை ஆரம்பத்தில் லூவர் அருங்காட்சியகம் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பிரான்ஸ் கிட்டத்தட்ட 200,000 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு 30,000க்கும் குறைவான இறப்புகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: