இலங்கைக்கான ஈரான் தூதுவர் - பிரதமர் மஹிந்தவிற்கு இடையில் சந்திப்பு

இலங்கை ஈரான் உறவுகளை மேலும் வலுவூட்டுவதற்கு தமது நாடு எதிர்பார்ப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பின்போது இலங்கைக்கான ஈரான் தூதுவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான ஈரான் தூதுவர் ஹஷிம் ஹஷ்ஜசாதேஹ் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இடையிலான சநதிப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) இடமபெற்றது 

குறித்த சந்திப்பின்போது  இந்த உறவுகளை மேலும் பலப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

மேலும் இவர்கள் இருவருக்கும் இடையிலான சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை மேலும் வலுவூட்டுவது தொடர்பாக அமைந்திருந்தது.

இலங்கை ஈரானுக்கு 150 தொடக்கம் 200 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்கின்றது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இலங்கை மேற்கொள்ளும் ஏற்றுமதிகளில் ஈரான் இரண்டாம் இடத்தை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: