இலங்கை மத்திய வங்கிக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு

உறங்கிக் கொண்டிருக்காமல் சரிவடைந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நாட்டுக்காக தமது பொறுப்புக்களை நிறைவேற்றுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மத்திய வங்கி அதிகாரிகளை பணித்துள்ளார்.

அதற்கான ஆதரவு இதுவரை கிடைக்காமை தொடர்பாகவும் அதற்குரிய காரணங்களை தெளிவுப்படுத்துமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளிடம் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டப்ளியு.டி லக்ஷ்மன் தலைமையிலான சிரேஷ்ட அதிகாரிகளுடன் ஜனாதிபதி செலயகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்ரேலியா உள்ளிட்ட முன்னணி நாடுகள், அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் மத்திய வங்கிகளும் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான முறைகளை முன்வைத்துள்ளன.

எனினும் இலங்கை மத்திய வங்கி பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான எந்தவொரு யோசனையையும் சமர்ப்பிக்கவில்லையென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.

No comments: