நாகபூசனி அம்மன் ஆலயதிற்குள் பாதணிகளுடன் படையினர் சென்றதை ஏற்க முடியாது - மாவை சீற்றம்

இலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க  நயினாதீவு நாகபூசனி அம்மன் ஆலய உற்சவத்தின்போது படையினர் ஆலயத்துக்குள் பாதணிகளுடன் வந்த சம்பவத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக இன்று டுவிட்டர் பதிவில் கருத்து வெளியிட்டுள்ள அவர், இவ்வாறான சம்பவங்களை அனுமதிக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நயினாதீவு நாகபூஷனி அம்மன் ஆலய உற்சவத்தின்போது பாதுகாப்பு பணிகளில் இருந்த படையினர் காலணிகளுடன் ஆலயத்துக்குள் சென்றமை தொடர்பாக உடனடி விசாரணையை முன்னெடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments