கொரோனா தொற்று - புதிதாக அடையாளம் காணப்பட்ட 22 பேர் தொடர்பான தகவல்..!

நாட்டில் இன்று இதுவரை 22 பேர் கொரோனா தொற்று உறுதியான நோயாளிகளாக அடையாளம்  காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அந்தவகையில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,857 ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 10 பேர் கடற்படை என்றும் 08 பேர் குவைத்தில் இருந்தும் 04 பேர் இந்தியாவில் இருந்து நாடுதிரும்பி தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவர்கள் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

No comments: