நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானக் கடைகளுக்கும் பூட்டு

பொசன் தினத்தை முன்னிட்டு அனைத்து மதுபானக் கடைகள், இறைச்சிக் கடைகள், சூதாட்ட விடுதிகள், இரவு விடுதிகள் மூடப்படும் என்று கலால் துறை தெரிவித்துள்ளது.

பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜூன் 05 ஆம் திகதி வெளியிட்டுள்ள HA-01 / 02/08/01 கடிதத்தின்படி இந்த ஆண்டுக்கான பொசன் பௌர்ணமி போயா தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மேற்கூறிய இடங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் இறைச்சி மற்றும் மதுபானங்களை விற்பனை செய்வது ஜூன் 05 மற்றும் 06 திகதிகளில் தடை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments