விசா குறித்து குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு

இலங்கையில் தரித்திருக்கும் வெளிநாட்டவர்களின் வீசா அனுமதிப் பத்திரங்களை நீடித்தல் தொடர்பில் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தினால் விசேட அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

தற்சமயம் இலங்கைக்கு வருகை தந்திருக்கும் வெளிநாட்டவர்கள் பெற்றுக் கொண்டிருக்கும் அனைத்து வகையான வீசாக்களினினதும் செல்லுபடிக் காலத்தை ஜூலை 11 வரை நீடிப்ப்பதாக அறிவித்துள்ளது.

முன்னர் அறிவித்ததன் பிரகாரம் வீசாக்களினினதும் செல்லுபடிக் கால 2020 ஜூன் மாதம் 11 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வரும் நிலையில் மேலும் 30 நாட்களுக்கு குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் நீடித்துள்ளது.

No comments: