இந்தவாரம் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் - மஹிந்த தேசப்பிரிய

பொதுத் தேர்தல் திகதி குறித்த அறிவிப்பினை இந்த வாரத்திற்குள் வெளியிட உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தல் குறித்து பல முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடி கலந்துரையாடிருந்த நிலையில் இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

தேர்தலை திகதியை அறிவிக்கமுன்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்க இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது என்றும் மஹிந்த தேசப்பிரிய கூறினார்.

இதேவேளை வேட்பாளர்களின் விருப்பு எண்ணை அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பு நாளை (09) வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தேர்தலுக்கான செலவீனங்கள் குறித்து விவாதிக்க தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளரை சந்திக்க உள்ளனர்.

இதேவேளை பிரசார வழிகாட்டுதல்களை ஒரு வர்த்தமானி மூலம் முறைப்படுத்துமாறு மஹிந்த தேசப்பிரிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்கவிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் எதிரொலி காரணமாக முன்னர் மதிப்பிடப்பட்ட 6 பில்லியன் என்ற தேர்தலுக்கான செலவு புதிய சுகாதார வழிகாட்டலுடன் நடத்தவேண்டும் என்றால் 09 பில்லியன் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: