குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வரமுடியவில்லை - கருணா அறிவிப்பு

முன்னாள் பிரதி அமைச்சரான கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் உடல்நலக் குறைவால் சி.ஐ.டி.யில் முன்னிலையாக முடியாதுள்ளதாக தனது சட்டத்தரணியின் ஊடாக அறிவித்துள்ளார்.

ஆணையிரவு முகாமினை ஒரே இரவில் தொடர் தாக்குதல்களினால் கைப்பற்றிய போது 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களை கொன்று குவித்தோம் என அண்மையில் கருணா அம்மான் தெரிவித்த கருத்தை அடுத்து குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

இந்தக் கருத்து பாரதூரமானது என தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் அவருக்கு எதிராக கோஷம் எழுப்பியது மாத்திரமின்றி வழக்குத் தாக்கல் செய்யுமாறும் சட்டநடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கோரினர்.

இதற்கமையவே அவரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்தே தனது சட்டத்தரணியின் ஊடாக மேற்குறிப்பிட்ட காரணத்தை தெரிவித்து தற்சமயம் சமூகமளிக்க முடியாது என கருணா அம்மான் அறிவித்துள்ளார்.

No comments: