Tuesday, June 23, 2020

இருபாலையில் வாள்வெட்டு: இருவர் காயம்...! ஒருவர் கைது...!

யாழ்ப்பாணம் இருபாலை மடத்தடிப் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ். மடத்தடிப் பகுதியில் மரணச் சடங்கு ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது. இந்த மரணச் சடங்கில் இரு தரப்புக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் அது வாள்வெட்டுச் சம்பவமாக மாறியுள்ளது.

இந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.