ஐ.தே.கவிலிருந்து நீக்கப்பட்டமைக்கு இடைக்காலத் தடை: 22 இல் நீதிமன்ற தீர்மானம்

கட்சி உறுப்பினர்களின் 99 பேரை இடைநிறுத்த ஐக்கிய தேசியக் கட்சி எடுத்த முடிவுக்கு தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டுமா இல்லையா என்பது குறித்த முடிவு எதிர்வரும் 22 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் கீழ் வேட்பு மனுக்களை தாக்கல் செய்த 99 ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை நீக்க ஐக்கிய தேசியக் கட்சி செயற்குழு அண்மையில் முடிவு செய்தது.

இந்நிலையில் அக்கட்சியின் செயற்குழு எடுத்த முடிவினை தடுத்து இடைக்கால தடை உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு கோரி, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மனு ஓன்றினை தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் குறித்த மனு விசாரணைக்கு வந்தபோதே ஐக்கிய தேசியக் கட்சி எடுத்த முடிவுக்கு தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டுமா இல்லையா என்பது குறித்த முடிவு எதிர்வரும் 22  ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

No comments: