இலங்கையில் கடற்படையினருக்கும் ஈரானில் இருந்து வந்தவர்களுக்கும் கொரோனா தொற்று - மொத்த எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 08 பேர் இன்று (16) அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி தற்போது கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1913 ஆக அதிகரித்துள்ளது.

இன்று அடையாளம் காணப்பட்ட 08 பேரில் 05 பேர் கடற்படையினர் என்றும் 03 பேர் ஈரானில் இருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்றும் அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை இன்றுகொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களில் மேலும் 29 பேர் குணமடைந்த நிலையில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கையும் 1371 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று உறுதியானவர்களில் 531 பேர் தொடர்ந்தும் மருத்துவ கண்காணிப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments