ஜேர்மனியில் மேலும் 214 பேருக்கு கொரோனா வைரஸ்

ஜேர்மனியில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 214 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொற்று நோய்களுக்கான ரோபர்ட் கோச் இன்ஸ்டிடியூட் நிறுவனம் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள தரவுகளின் பிரகாரம் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1 இலட்சத்து 84 ஆயிரத்து 193 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை அங்கு மேலும் 06 பேர் உயிரிழந்த நிலையில் கொரோனா வைரஸினால் மரணித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 8,674 ஆக உயர்ந்துள்ளது.

No comments: