ஊரடங்கில் வீட்டில் இருந்து கீர்த்தி சுரேஷ் என்ன செய்கிறார் என்று பாருங்களேன்

ஊரடங்கில் வீட்டில் இருந்து கீர்த்தி சுரேஷ் என்ன செய்கிறார் என்பது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் விஜய், சூர்யா, தனுஷ், விக்ரம், விஷால், சிவகார்த்திகேயன் என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

மேலும் தற்போது கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். மேலும் பாலிவுட் படங்களிலும் இவர் நடித்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் சிறுத்தை சிவா இயக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடிக்கிறார்.

தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கீர்த்தி சுரேஷ் வீட்டில் இருந்து வருகிறார். வீட்டில் இருக்கும் இவர் தன்னுடைய பெற்றோர்களுக்கு விதவிதமாக சமைத்து கொடுத்து அசத்தி வருகிறார்.

No comments: