14 வயதில் மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனனுக்கு நேர்ந்த கொடுமை
June 04, 2020
14 வயதில் தனக்கு நேர்ந்த இனவெறி பிரச்சினையைக் குறித்து மாளவிகா மோகனன் பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் பேட்ட படத்தின் மூலமாக அறிமுகமாகி தற்போது விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்திருப்பவர் மாளவிகா மோகனன்.
இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவான நபராக இருந்து வருகிறார்.
அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வரும் மாளவிகா மோகனன் தற்போது தனக்கு 14 வயதில் நிகழ்ந்த இனவெறி குறித்து பேசியுள்ளார்.
தன்னுடைய நேரத்தை வைத்து சிலர் கிண்டல் செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
வெள்ளையாக இருப்பவர்கள் அழகு கருப்பாக இருப்பவர்கள் அழுக்கு என இச்சமுதாயம் நடத்துகிறது. ஆனால் உண்மையில் நல்ல மனமுடையவர்களே அழகானவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments