ஜூலை 6 ஆம் திகதி முதல் பாடசாலைகள் ஆரம்பம் - கல்வி அமைச்சு

எதிர்வரும் ஜூன் 29 ஆம் திகதியுடன் அனைத்து பாடசாலைகளின் விடுமுறைகள் நிறைவுக்கு வருவதாக கல்வி அமைச்சர் டளஸ் அளகப்பெரும தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை 4 கட்டங்களாக மீண்டும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் மேலும் அறிவித்துள்ளார்.

அதன்படி தரம் 05, தரம்11 மற்றும் 13 ஆம் வகுப்புகள் ஜூலை 06 ஆம் திகதி அன்று மீண்டும் ஆரமபமாகும் என அவர் கூறினார்.

அதன்படி, எதிர்வரும் ஜூலை 6 ஆம் திகதி முதல்  மூன்று கட்டங்களாக பாடசாலை திறக்கப்பட்டு கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜூலை 6முதல் ஜூலை 17 வரை தரம் 5, தரம் 11, தரம் 13 வகுப்புக்கள் ஆரம்பமாகும் என்றும் ஜூலை 20 தரம் 10, 12 வகுப்புக்கள் ஆரம்பமாகும் என்றும் ஜூலை 27 தரம் 3, தரம் 4, தரம் 6, தரம் 7, தரம் 8, தரம் 9 வகுப்புக்கள் தொடங்கும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.

உயர்தர பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன - மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

- முதல் கட்டம் ஜூன் 29 - ஜூலை 3 வரை
- 2 வது கட்டம் ஜூலை 6 - ஜூலை 17 வரை (5, 11, 13 வகுப்புக்கள்)
- 3 வது கட்டம் ஜூலை 20 (10, 12 வகுப்புக்கள்)
- 4 ஜூலை 27 (3, 4, 6,7, 8, 9 வகுப்புக்கள்)

No comments: