நாடாளுமன்ற அரசியலில் இருந்து விலகுவதாக முன்னாள் நிதி அமைச்சர் அதிரடி அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக எதிர்வரும் பொதுத் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர அறிவித்துள்ளார்.

மேலும் நாடாளுமன்ற அரசியலில் இருந்து தான் விலக தீர்மானித்துள்ளதாகவும் எனவே எதிர்வரும் பொதுத்  தேர்தலில் தனக்கு வாக்களிப்பதை தவிர்க்குமாறும் அவர் மாத்தறை மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே மேற்கண்ட அறிவிப்பை விடுத்துள்ளார்.

No comments: