புலம்பெயர் தமிழர்கள் நீதி கோரி பிரித்தானியாவில் போராட்டம்

வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்களின் தினமான நேற்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவரை மீட்கும் முகமாக பிரித்தானியாவில் போராட்டம் ஒன்று இடம்பெற்றது.

தாயகத்தில் இலங்கை அரசால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவரை மீட்கும் முகமாக Trafalgar Square ல் இந்த போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்திற்கு புலம்பெயர் தமிழர்கள் பலர் கலந்துகொண்டிருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதியை கோரி கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments: