ஐ.டி.ச். தீவிர சிகிச்சை பிரிவில் சுகாதார அமைச்சர் பவித்ரா..!!


சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி, அங்கொடையில் உள்ள தொற்று நோய்கள் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் நேற்று (28) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹிக்கடுவையில் உள்ள சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று காலை கொட்டலவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இருப்பினும்,  வருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் அடையாளம் காண தொடங்கியதால், நேற்று மாலை அவர் ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் அவர் குணமடைந்து வருவதாக சுகாதார அமைச்சும் அறிவித்துள்ளது.

இதேவேளை அவரது கணவருக்கும் மகளுக்கும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

No comments: