நாட்டில் கொரோனா தொற்று காரணமாக 300 ற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு


நாட்டில் கொரோனா தொற்று காரணமாக மேலும் எட்டு பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 300 ஐக் கடந்துள்ளது.

இதனடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 305 ஆக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 859 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 839 பேரும், சிறைக்கைதிகள் 20 பேரும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனால் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை  62 ஆயிரத்து 445 ஆக பதிவாகியுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 963 பேர் குணமடைந்து நேற்று வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்து 398 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், 6 ஆயிரத்து 750 பேர் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சைப்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: