ஐ.நா. பேரவையில் இலங்கையுடனான அரசியல் ரீதியான உறவை உயர்ந்த மட்டத்தில் பேணுவோம் - ரஷ்யா


இறையாண்மை, ஜனநாயக மற்றும் சமூக நோக்குடைய அரசாக சர்வதேச ரீதியில் இலங்கை அங்கீகாரம் பெற்றுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

ரஷ்யாவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இலங்கையின் எதிர்வரும் சுதந்திர தினத்தை முன்னிட்டு கருத்து தெரிவிக்கும்போதே அந்நாட்டின் வௌிவிவகார அமைச்சின் பேச்சாளர் மரியா சகரோவா இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் ரஷ்யா மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் தொடர்ச்சியாக ஆக்கபூர்வமாக காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் ஐ.நா. சபை மற்றும் சர்வதேச ரீதியான விவகாரங்களில் இலங்கையுடனான அரசியல் உறவுகளை தாம் உயர் மட்டத்தில் பேணிவருவதாகவும் மரியா சகரோவா சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் ஒரு முக்கிய வர்த்தக பங்காளியாக ரஷ்யா இருப்பதாகவும் தமது நாட்டுக்கு தேயிலை இறக்குமதித்துறையில் இலங்கை பாரிய பங்காற்றி வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments