மூன்று இராணுவ வீரர்களுக்கு முதன்முதலில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது..!


இந்தியாவினால் வழங்கப்பட்ட அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி விநியோக நடவடிக்கை  இன்று (29) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் மூன்று இராணுவ வீரர்களுக்கு கொழும்பில் உள்ள இராணுவ மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி முதன்முதலில் செலுத்தப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக மேல் மாகாணத்தின் ஆறு முக்கிய வைத்தியசாலைகளில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கமைய இந்திய அரசாங்கத்தினால் 5 இலட்சம் சீரம் நிறுவனம் உருவாக்கியுள்ள அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் எனும் தடுப்பூசிகள் நன்கொடையாக  வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments