கொரோனா தொற்று உறுதியாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு


கொரோனா தொற்று உறுதியான மேலும் 8 பேர் நேற்று உயிரிழந்ததை அடுத்து மொத்த இறப்பு எண்ணிக்கை 313 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுள் 70 வீதமானவர்கள் மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி நேற்றைய நாளில் 859 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றுள் 313 பேர் கொழும்பு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை அடையாளம் காணப்பட்ட 63,293 பேரில் 56,277 பேர் குணமடைந்துள்ளதோடு, 6,703 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

No comments: