துறைமுக சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனம்


துறைமுக சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கு அமைய, ஜனாதிபதி செயலகத்தினால் நேற்று (30) இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையம் குறித்து, சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையிலேயே, இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, துறைமுக அதிகார சபையின் கீழ் வரும் சேவைகள், நடவடிக்கைகள் மற்றும் தொழில் பங்களிப்புகள் அத்தியாவசியம் ஆக்கப்பட்டுள்ளன.

No comments: