நாட்டின் இறைமைக்குள் மிச்சேல் பச்லெட் கைவைத்துவிட்டதாக சரத் வீரசேகர குற்றச்சாட்டு


ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பச்லெட், நாட்டின் இறைமைக்குள் கைவைப்பதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் இராணுவ அதிகாரிகளை முக்கிய பதவிகளில் அமர்த்தும் நடவடிக்கை தொடர்பாக ஜனாதிபதிக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் அவரது அறிக்கை முற்றிலும் பிழையானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி கூட ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை முக்கிய பதவிகளில் நியமித்துள்ளார் எனவும் சரத் வீரசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் சார்பாக அமெரிக்காவின் தீர்மானத்திற்கு இனை அணுசரணை வழங்கிய முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவவே தற்போதைய நிலைமக்கு காரணம் என சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

எனவே இந்த விடயங்களில் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிறந்த முடிவை எடுப்பர் என்றும் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

No comments: