யாழில் புதிய தனிமைப்படுத்தல் நிலையம் - இராணுவத் தளபதி


நாட்டிற்கு அழைத்துவர எதிர்பார்க்கப்படும் இலங்கையர்களை தங்க வைப்பதற்காக தனிமைப்படுத்தல் நிலையங்கள் அதிகரிக்கப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்று (30) யாழ்ப்பாணம் பாலாலியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,  தனிமைப்படுத்தல் நடவடிக்கையில் முப்படையினர் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என கூறினார்.

புதிய வெளிநாட்டு வருகையாளர்களை தனிமைப்படுத்த யாழில் புதிய தனிமைப்படுத்தல் நிலையம் நிறுவப்படவுள்ளதாகவும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

தனிமைப்படுத்தல் நிலையம் தற்போதைய சூழ்நிலையில் அரசாங்கத்திற்கும் சுகாதார அதிகாரிகளுக்கும் தேவையான அனைத்து பங்களிப்பையும் வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments: